ரிலையன்ஸ் ஜியோவுடனானபோட்டியை வலுப்படுத்தும் வகையில், தனது ப்ரீபெய்டு
வாடிக்கையாளர்களுக்கு 79 ரூபாய் முதல் 509 ரூபாய் வரையிலான ஐந்து புதிய
திட்டங்களை வோடஃபோன் நிறுவனம்அறிவித்துள்ளது.
இதுகுறித்து வோடஃபோன் இந்தியா நிறுவனத்தின் தமிழ்நாடு
வட்டாரத் தலைவர் முரளி கூறுகையில், “வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்தே
எங்களது நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில்
அனைத்து வகையான வாடிக்கையாளர்களும் பயனடையும் வகையில் தற்போது புதிதாக சில
திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.ரூ.79
திட்டத்தில், 79 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் ஏழு
நாள்களுக்கு 500 எம்.பி அளவிலான டேட்டாவை இலவசமாகப் பெறலாம். இச்சலுகை
2ஜி/3ஜி/4ஜி மொபைல்போன்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் பொருந்தும் என்று
வோடஃபோன் கூறியுள்ளது. இச்சலுகையில் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி
அழைப்பு வசதி, குறுஞ்செய்திசேவைகளுக்கு ரூ.25 பைசா என்றும்
அறிவித்துள்ளது.ரூ.199 திட்டத்தில் 2ஜி/3ஜி/4ஜி வாடிக்கையாளர்கள்28
நாள்களுக்கு 1 ஜி.பி. அளவிலான டேட்டாவை இலவசமாகப் பெறலாம். ரூ.347
திட்டத்தில் 2ஜி/3ஜி/4ஜி வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி. அளவிலான
டேட்டா என, 28 நாள்களுக்கு இலவசமாகப் பெறலாம்.
ரூ.459 திட்டத்தில் 2ஜி/3ஜி/4ஜி வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 1 ஜி.பி. அளவிலான டேட்டா என 70 நாள்களுக்கு இலவசமாகப் பெறலாம். ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 1 ஜி.பி. அளவிலான டேட்டா என 84 நாள்களுக்கு இலவசமாகப் பெறலாம். மேற்கூறிய சலுகையில் வரம்பற்ற லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங்அழைப்பு வசதிகளும், இலவசமாகத் தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் உள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...