அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை
நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில்,
6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்
செயல்படுகின்றன.
இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள்,
பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும்
மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால்,
பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில்,
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு
நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில்,
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து
கொள்ளலாம்.
மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
Hello sir any news about paper 2 posting list sir
ReplyDelete