ஒவ்வொருவரின் வாழ்விலும் தோல்வி, மோசமான நாட்கள், தனிமை எனப் பல இருக்கும், ஆனால் அனைத்தையும் தாண்டி உறுதியாக நிற்பவர்களுக்கு எப்போதுமே வெற்றிதான் என்பதை நிருபணம் செய்யும் வெற்றிக்கதை தான் நாம் இப்போது பார்க்கப்போவது. சென்னை மெரினாவில் துவங்கிய பயணம் இன்று சென்னையில் முன்னணி உணவகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது பிரசன் சந்திப்பா ஹோட்டல்.
பிரசன் சந்திப்பா ஹோட்டல் இந்த ஹோட்டல் தற்போது சென்னையில் பல இடங்களில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டு வந்தாலும் இதன் முதல் துவக்கம் ஒரு தள்ளுவண்டி கடையில் தான். இதன் உரிமையாளர் பட்ரிசியா நாராயன் பல தோல்விகளைக் கடந்து தற்போது வெற்றிகரமான இந்த ஹோட்டல்களை நடத்தி வருகிறார்.
குடும்பம் மற்றும் முடிவுகளும்.. பட்ரிசியாவின் தந்தை தபால் துறையிலும், தாய் டெலிபோன் துறையில் பணியாற்றி வந்தனர். சென்னை சாந்தோம் பகுதியில் இருந்த வீட்டில் 3 பிள்ளைகளுடன் பட்ரிசியா குடும்பம் வாழ்ந்து வந்தனர். சென்னை குயின்ஸ் மேரி கல்லூரியில் படித்து வந்த பட்ரிசியா, நாராயன் என்பவரைக் காதலித்தார். இதற்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாராயனை திருமணம் செய்துகொண்டார்.
சோகத்தின் துவக்கம்.. பட்ரிசியா நாராயன் அவர்களின் திருமணத்திற்குப் பின் பெற்றோர்கள் கைவிட்டனர், அதன் பின் கணவன் போதைப் பொருட்களுக்கு அடிமை என்பதை அறிந்து அதிர்ந்துபோனார். இதனால் வீட்டுச் செலவுகளுக்கும், 2 பிள்ளைகளை வளர்க்கவும் பட்ரிசியாவுக்குப் பணமில்லாமல் தவித்தார்.
நம்பிக்கை பிறந்தது பொருளாதாரச் சிக்கலில் தவித்த பட்ரிசியா வீட்டிலேயே ஜாம், ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்யத் துவங்கினார். இதன் விற்பனையில் இருந்து சிறு தொகை வந்தாலும் போதியதாக இல்லை. ஆனால் நம்பிக்கை பிறந்தது.
திருப்புமுனை.. 80களில் தள்ளுவண்டிக் கடைகளில் டீ, சிகரெட் மட்டுமே விற்கப்பட்டு வந்த நிலையில் பட்ரிசியா உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் திட்டமிட்டார். இதன் படி ஜூன்21, 1980 ரிக்ஷா ஒட்டுநர்கள் துணையுடன் ஒரு தள்ளுவண்டியை மெரினா கடற்கரையில் கொண்டு சென்றார். இங்கு டீ, காபி மற்றுமல்லாமல் கட்லெட், சமோசா, பஜ்ஜி, ஜூஸ் எனப் பல உணவுப் பொருட்களை விற்கத் துவங்கினார்.
முதல் நாள் விற்பனை கடையைத் திறந்த முதல் நாளில் வெறும் ஒரு டீ மட்டுமே விற்றார் பட்ரிசியா அதன் மதிப்பு 50 பைசா மட்டுமே. இதனால் துவண்டுப்போனார் பட்ரிசியா, ஆனால் அவரின் தாயார் கொடுத்த ஊக்கத்தின் மூலம் வர்த்தகத்தைத் தொடர்ந்தார். இதனால் 2வது நாளில் பட்ரிசியா சுமார் 600-700 ரூபாய் வரையில் உணவு பண்டங்களை விற்பனை செய்தார்.
விரிவாக்கம்.. இதனால் சில நாட்களில் இதே தள்ளுவண்டி கடைகளில் ஐஸ்கிரீம், சான்வெட்ஜ், பிரென்ச் பிரைஸ் மற்றும் ஜூஸ் வகைகளைச் சேர்த்தார். இதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்தது இதன் காரணமாக 1982 முதல் 2003ஆம் ஆண்டு இடைவேளையில் இக்கடையின் விற்பனை அளவு 0.50 பைசாவில் இருந்து 25,000 ரூபாயாக உயர்ந்தது. இதனால் மெரினா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சென்னையிலும் பட்ரிசியா பிரபலம் அடைந்தார்.
முதல் கேன்டீன் இந்தக் கடை மற்றும் அதன் வளர்ச்சி கண்ட குடிசை மாற்று வாரியம் தலைவர், அதன் அலுவலகத்தில் கேன்டீன் நடத்த பட்ரிசியாவுக்கு அனுமதி அளித்தார். அன்று முதல் தொடர்ந்து ஏறுமுகம் தான்
நாள் முழுவதும்.. இதன் பின் தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்து இட்லி வைத்துச் சமைத்து விட்டு 9 மணிக்கு கேன்டீன் செல்வார், அங்கு மதியம் 3.30 மணி வரையில் இருந்துவிட்டுப் பின் கடற்கரை கடைக்குச் சென்று இரவு 11 மணி வரையில் அங்கு இருப்பார். இதன் மூலம் ஒரு நாளுக்கு 3000 பேர் சாப்பிடும் அளவிற்கு வர்த்தகம் உயர்ந்தது.
அடுத்த வாய்ப்பு அடுத்தாகப் பட்ரிசியாவுக்குப் பாங்க் ஆப் மதுரா வின் கேன்டீன் நடத்த வாய்ப்புக் கிடைத்தது. தற்போது இதன் பெயர் ஐசிஐசிஐ வங்கி. இதன் மூலம் கூடுதலாக 300 பேருக்கு உணவளிக்கும் வாய்ப்பு கிடைத்து. இதன் பின் குடிசை மாற்று வாரியத்தில் இருந்த கேன்டீனை மூடிவிட்டார்.
சண்டையிலும் வாய்ப்பு.. ஒரு நாள் கணவன் உடனான சண்டையால் மனம் உடைந்த பட்ரிசியா பஸ்சில் ஏறி கடைசி நிறுத்தம் வரையில் சென்றார். இறங்கிய இடத்தில் மத்திய அரச நடத்தும் தேசிய துறைமுக மேலாண்மை பயிற்சி பள்ளி இருந்தது. எந்தவிதமான யோசனையுமின்றி இதன் நிர்வாகத் தலைவரை சந்தித்து, தான் கேன்டீன் நடத்துவதாகவும், நீங்கள் கேன்டீன் ஒப்பந்தத்திற்காகத் புதிதாக ஒருவரை தேடி வருவதாகப் பொயாக ஒன்றைக் கூறினார். ஆனால் உண்மையிலேயே அவர்கள் கேன்டீன் நடத்த புதிதாக ஒருவரை தேடிக்கொண்டு இருந்தனர்.
அதிக லாபம்.. அதிக வர்த்தகம்.. இதன்மூலம் பட்ரிசியா தேசிய துறைமுக மேலாண்மை பயிற்சி பள்ளியில் கேன்டீன் நடத்த ஒப்பந்தம் பெற்றார். இதில் பட்ரிசியா பிற அனைத்து இடங்களை விடவும் அதிக லாபம் கிடைத்தது. இதேபோல் தினமும் சுமார் 700 பேருக்கு உணவளிக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளியிலேயே தங்குவதற்காக அவருக்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டது.
அதிக லாபம்.. அதிக வர்த்தகம்.. இதன்மூலம் பட்ரிசியா தேசிய துறைமுக மேலாண்மை பயிற்சி பள்ளியில் கேன்டீன் நடத்த ஒப்பந்தம் பெற்றார். இதில் பட்ரிசியா பிற அனைத்து இடங்களை விடவும் அதிக லாபம் கிடைத்தது. இதேபோல் தினமும் சுமார் 700 பேருக்கு உணவளிக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளியிலேயே தங்குவதற்காக அவருக்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டது.
வருமானம்.. முதல் வார வர்த்தகத்தில் 80,000 ரூபாய், அடுத்தடுத்த வாரத்தில் 10,000 ரூபாய் வரையிலான வருமானத்தைப் பெற்றார் பட்ரிசியா. இந்த வளர்ச்சி மற்றும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள அனைத்து வேலைகளும் சரியாக நடக்க நிர்வாகப் பணிகளில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினார் பட்ரிசியா.
கூட்டணி.. இந்தக் கேன்டீன் வர்த்தகம் 1997 வரையில் தொடர்ந்தது. அதன்பின் 1998ஆம் ஆண்டுச் சங்கீதா உணவக குழுமத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் பட்ரிசியா மகன் பிரவின் ராஜ் குமார் தனியாக ஹோட்டல் அமைத்துத் தனிப் பிராண்டாக உருவாக வேண்டும் எனக் கூறினார்.
மீண்டும் சோகம்... 2004ஆம் ஆண்டில் தனியாக ஹோட்டல்களைத் துவக்க பணிகள் நடத்திக்கொண்டு இருக்கும்போது பட்ரிசியா தனது மகளையும் மருமகனையும் ஒரு கார் விபத்தில் இழந்தார். இதனால் தனிப்பட்ட முறையிலும், வர்த்தக நிர்வாகத்தில் பின்தங்கினார் பட்ரிசியா.
சந்திப்பா பிறப்பு.. பட்ரிசியா நிர்வாகத்தில் பின்தங்கினாலும், அவரது மகன் தனது திட்டத்தில் உறுதியாக இருந்து 2006ஆம் ஆண்டில் தனது சகோதரியின் பெயரில் சந்திப்பா என்ற பெயரில் ஹோட்டல் துவங்கினார் பிரவின்.
ஆம்புலன்ஸ் கார் விபத்தில் தனது மகள், மருமகன் மற்றும் அவர்களுடன் இருந்த 2 பேர் ஆகியோரை ஆம்புலன்ஸ் அதிகாரிகள் எடுக்க முடியாது என்றும் தகராறு செய்த காரணத்தால் அருகில் இருந்தவர்கள் நான்கு பேரையும் காரின் டிக்கியில் கொண்டு வந்தனர். இதனைப் பார்த்து உடைந்து போனார் பட்ரிசியா. விபத்து மற்றும் சோகத்தில் இருந்து மீண்ட பட்ரிசியா, தனது மகளைப் பறிகொடுத்த அச்சிரபாக்கத்திலேயே புதிதாக ஆம்புலன்ஸ் சேவையைத் துவங்கினார்.
விருது.. இப்படி அனைத்துத் தடைகளையும் தாண்டி வந்த பட்ரிசியாவுக்கு ‘FICCI Woman Entrepreneur of the Year' விருது 2010ஆம் ஆண்டுக் கிடைத்தது.
வெற்றி பயணம்.. சோகம், தோல்வி என அனைத்தையும் தாண்டி 50 பைசாவில் துவங்கிய பயணம் இன்று ஒரு நாளுக்கு 2,00,000 ரூபாய் வரையிலான வருமானத்தைப் பெறும் அளவிற்கு வர்த்தக்தை உயர்த்தியுள்ளார். வெறும் 2 பேருடன் துவங்கிய வர்த்தகம் இன்று 200 பேர் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.
ReplyDeleteசகோதரிக்கு என் வாழ்த்துக்கள் .