உலக எய்ட்ஸ் தினத்தை (டிசம்பர் 1)முன்னிட்டு, பிரபல மணல்
சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 800 அடி நீளத்திற்கு சிவப்பு எய்ட்ஸ் ரிப்பனை வடிவமைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
1988ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார நிறுவனம் டிசம்பர் 1ஆம் தேதியை ‘உலக எய்ட்ஸ் தினம்’ என அனுசரித்துவருகிறது. அதன் படி, இன்று உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐநாவின் எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பின்படி எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில், உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. உயிர்க்கொல்லி நோயான எச்ஐவி-யை முழுமையாகக் குணப்படுத்துவதற்கு மருந்து இல்லையென்றாலும், வாழ்நாளை நீட்டிக்கத் தேவையான மருந்துகள் இருக்கின்றன. எய்ட்ஸ் நோயுடன் பல மக்கள் போராடி வருகின்றனர்.
எனவே எய்ட்ஸ் நோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்னாயக் நேற்று (நவம்பர் 30) ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில், சிவப்பு ரிப்பனை மணல் சிற்பமாக வடித்துள்ளார். அதில், ஸ்டாப் எய்ட்ஸ் மற்றும் வோர்ல்ட் எய்ட்ஸ் டே எனக் குறிப்பிட்டுள்ளார். 800 அடி நீளத்திலும் 400 அடி அகலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மணல் சிற்பம் லிம்கா புக் ஆஃப் வோர்ல்ட் ரெக்கார்ட்ஸில் ( Limca book of World record) இடம்பிடித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...