சென்னைக்கு புயல் ஆபத்து எதுவும் இல்லை. மழைக்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், "சென்னையை வரும் நாட்களில் மிகப்பெரிய புயல் தாக்கப் போகிறது என்று பரபரப்பை உண்டாக்கிய நம் ஊடகங்கள் கணிப்பு அனைத்தும் வீணாகப் போகிறது.
கடந்துசென்ற ஒக்கி புயலை பரபரப்பான செய்தியாக மாற்றி இருப்பது அவசியம், அதை விட்டுவிட்டோம். ஆனால், இப்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்பது 'ஒன்றுமில்லாதது'. இதற்கு இந்த அளவுக்கு பரபரப்ப உண்டாக்க அவசியம் இல்லை. ஆதலால், மக்களை அச்சுறுத்தும் வகையில், புயல் குறித்து பரபரப்பாக செய்திகளை வெளயிடுவதை தவிர்க்கலாம்.
வரும் வாரத்தில் சென்னைக்கு எந்தவிதமான புயல் எச்சரிக்கையும் இல்லை. தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி , தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக மாறினாலும் கூட, அது ஆந்திர மாநிலம் நோக்கி நகர்ந்துவிடும். மேலும், சாதகமான சூழல் இல்லாததால், அது வலுவிழக்கக் கூடும்.மழை இருக்கும், ஆனால், வெள்ளம் வரும் அளவுக்கு மழை இருக்காது. கனமழையோ அல்லது மிகமிக கனமழையோ கூட இருக்கலாம்.
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம். ஆனால், நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்தது போன்றோ, அல்லது கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பெய்த மழை போன்றோ மிக கனமழை இருக்காது. மக்களை மிரட்டாத அளவுக்கு கனமழை இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வரும் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும். ஆதலால், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். அபாயம் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், புயல் தாக்கும் அபாயம் இல்லை.''
இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...