தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பேர் வேலை தேடி வருவதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்குக் குறைவான ஊதியம்
வழங்கும் நோக்கில் நிறுவனங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக
இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் உயர்மட்டக் குழு உறுப்பினரும் அந்நிறுவன
முன்னாள் தலைமை நிதியதிகாரியுமான மோகன்தாஸ் பாய் தெரிவித்துள்ளார்.
இதுபோல ஊதியக் குறைப்புக்காக நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது நெறிமுறைக்குப் புறம்பானது என்று கூறும் மோகன்தாஸ், “ஆரம்பகட்ட ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்புக்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பெரு நிறுவனங்கள் தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டு ஊதியத்தைக் குறைவாகவே வைத்திருக்கின்றன. இது முறையல்ல. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குப் போதுமான ஊதியத்தை வழங்க வேண்டும். உயர்மட்ட ஊழியர்களுக்கு அளவுக்கு அதிகமான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது மற்றும் ஆரம்பகட்ட ஊழியர்களுக்குப் போதிய ஊதியம் வழங்குவதை அந்நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் புதிதாக நுழையும் ஆரம்பகட்ட ஊழியர்களுக்கான ஊதியம் உயரவேயில்லை. மாறாகக் கடந்த ஏழு ஆண்டுகளில் அவர்களின் ஊதியம் பாதியளவு குறைக்கப்பட்டுள்ளது. இது நெறிமுறைக்குப் புறம்பானது. இதனால் புதிய ஊழியர்களின் திறன் நசுக்கப்படும். எனவே குறைவான ஊதியம் பெறும் அனைவரது ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும். அடிப்படை ஊழியர்களுக்கு ஏதுவான ஊதியத்தை வழங்கிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் டிசம்பர் 27ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...