கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்ற
மதுரை கிளைக்கும் நாளை (டிசம்பர் 23) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் நேற்று (டிசம்பர் 21) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 28 ஆம் தேதியன்று விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும். இந்த நாளில் அவசரம் கருதித்தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும். இந்த மனுக்களை சென்னையில், நான்கு நீதிபதிகளும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகளும் விசாரிப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2016 டிசம்பர் 24ஆம் தேதி முதல் 2017 ஜனவரி 1ஆம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. டிசம்பர் 29 ஆம் தேதியன்று நீதிமன்றம் செயல்பட்டது. அவசரம் கருதித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வைத்தியநாதனும், வி.பார்த்திபனும் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு கே.கல்யாணசுந்தரமும், ஆர்.மகாதேவனும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...