வரும் ஆண்டில் வங்கிகளின் குறுகிய கால ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம்
ஏதும் இருக்காது என்று நோமுரா நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
முன்னதாக அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிதிக் கொள்கை அறிக்கையில் ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. அதன்படி தற்போதுள்ள 6 சதவிகித வட்டி விகிதமே தொடர்ந்து வருகிறது. இந்த அளவு வரும் ஆண்டிலும் தொடரும் என்று நோமுரா நிறுவனம் கூறுகிறது. பணவீக்கம் உயர்வு, பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் போன்ற காரணங்களால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியானது மந்த நிலையிலிருந்து மீண்டு வரும் தற்போதைய சூழலில் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைப்பதில் நிதிக் கொள்கைக் குழுவிற்கு நாட்டம் இருக்காது. எனவே, 2017 பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிதிக் கொள்கை அறிக்கையில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...