தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மழை காலங்களில் பாதிக்கப்பட்டு
வருகின்றனர். குறிப்பாக அதிகமாக மழை பெய்யும், மலை மாவட்டங்களில் மாணவ,
மாணவிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதை தவிர்க்க
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
வரும்
11ம் தேதி இதற்கான கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்படும். 3.52 கோடி
ரூபாய் செலவில் 1,17,236 ரெயின் கோட் வாங்கப்படும். 28 இன்ச் அளவில் 21,383
ரெயின் கோட், 30 இன்ச் அளவில் 23,832 ரெயின் கோட், 32 இன்ச் அளவில் 29,806
ரெயின் கோட், 34 இன்ச் அளவில் 42,215 ரெயின் கோட் வாங்கப்படவுள்ளது.
இந்த ரெயின் கோட் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, மதுரை, திருச்சி,
விழுப்புரம், திருநெல்வேலி, நாமக்கல், சேலம், தேனி, மதுரை, கிருஷ்ணகிரி,
தர்மபுரி மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
Arambam adutha adi
ReplyDeleteArambam adutha adi
ReplyDelete