பொறியியல் பட்டதாரிக்கு உடனே போலீஸ் வேலை வழங்க வேண்டும் என்று
சென்னை உயர் நீதிமன்றம் சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தை சேர்ந்த விஜய் தாக்கல் செய்திருந்த மனுவில், “ கடந்த மே மாதம் நடைபெற்ற காவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் 62 சதவிகிதம் மதிப்பெண்ணுடன் உடற் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். ஆனால் பணி நியமன உத்தரவு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் என் மீது கொலை மிரட்டல் வழக்கு இருப்பதாகக் கூறி தேர்ச்சி ரத்து செய்யப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி பக்கத்து வீட்டுப் பெண், சொத்து வாங்குவது தொடர்பான பிரச்சனையில் என் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் அது தவறான புகார் என்று கூறி வழக்கைக் காவல்துறையினர் முடித்து வைத்தனர். இது தொடர்பான அறிக்கையைச் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் முடித்து வைக்கப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி என்னுடைய தேர்ச்சியை ரத்து செய்தது சட்ட விரோதமானது. எனவே எனக்கு வேலை வழங்கச் சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும் “என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று (டிசம்பர் 16) நீதிபதி டி.ராஜா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. மடித்து வைக்கப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி வேலை வழங்க மறுப்பது சட்ட விரோதமானது. எனவே விஜய்க்கு இரண்டாம் நிலை காவலர் பணி வழங்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்

தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் இந்த காவல்துறை பணியில் சேர்ந்து கஷ்டபடதாங்க காவலராய் எனது வேண்டுகோள்
ReplyDelete