புகார்கள் எழுந்தது.இது தொடர்பான வழக்கில், குவாரிகளை மூடுவதற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால், கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணலை பயன்படுத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆற்று மணலுக்கு மாற்றாக, எம் - சாண்ட் பயன்படுத்த வேண்டும் என, அரசு கூறி வருகிறது.எம் - சாண்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில், குறும்படம் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், பல மாவட்டங்களில், தரமற்ற, எம் - சாண்ட் விற்கப்படுவதால், அரசு மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்கள், அவற்றை பயன்படுத்த தயங்கி வருகின்றன.எனவே, தரமான, எம் - சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, பொதுப்பணித்துறை வாயிலாக, லைசென்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, திருவள்ளூர், வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், 10 நிறுவனங்களுக்கு லைசென்ஸ் தரப்பட்டுள்ளது. இதேபோல, மேலும் பல நிறுவனங்களும், பொதுப்பணித்துறையிடம் லைசென்ஸ் பெற
விண்ணப்பித்துள்ளன.
விண்ணப்பித்துள்ளன.
அது என்ன 'எம் - சாண்ட்' : குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கருங்கல்லை, ஆலைகளில் உடைத்து தயாரிக்கப்படுவதுதான், 'எம் - சாண்ட்' என்ற செயற்கை மணல். இதை தயாரிப்பதற்கான விதிமுறைகளை பொதுப்பணித்துறை வகுத்துள்ளது. இதற்கு முன், கருங்கல் துகள்களை நீரில் அலசி, வடிகட்டி, எம் - சாண்ட் தயாரிக்கும் தொழில்நுட்பம், நடைமுறையில் இருந்தது.
தற்போது, தண்ணீரை பயன்படுத்தாமலேயே, கருங்கல் துகள்களில் உள்ள துாசியை அகற்ற, அதிநவீன இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துஉள்ளன. எனவே, 'எம் - சாண்ட்' மணலை, ஆற்று மணலுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
தற்போது, தண்ணீரை பயன்படுத்தாமலேயே, கருங்கல் துகள்களில் உள்ள துாசியை அகற்ற, அதிநவீன இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வந்துஉள்ளன. எனவே, 'எம் - சாண்ட்' மணலை, ஆற்று மணலுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...