மகாராஷ்டிர மாநில அரசிடமிருந்து நிதி உதவி பெறும் பள்ளிகளில், மாற்றுத்
திறனாளி மாணவர்களுக்கென சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள்
நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்தும்படி அந்த மாநில அரசுக்கு மும்பை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக அரசால் நியமிக்கப்படும் ஆசிரியர்களும், உதவியாளர்களும் பணி நிரந்தரம் பெறுவதையும் உறுதி செய்யும்படியும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சோலாப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மூடப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் உதவியாளாகப் பணியாற்றிய ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி, பாரதி டாங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களை நியமிக்கும்படி மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒüரங்காபாத் கிளை பிறப்பித்த உத்தரவை மாநில அரசு அலட்சியம் செய்தது குறித்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகள் ஆகியவை வழங்கப்பட்டாலும், அது அர்த்தமுடையதாக இருக்க வேண்டும். அவர்களால் மற்ற மாணவர்களைப் போல் செயல்பட முடியாது என்பதால் அவர்களுக்கு சிறப்பு கவனம் தேவை. சில மாணவர்களை பள்ளி வளாகத்துக்குள் தூக்கிக் கொண்டு வர வேண்டிய நிலையும் உள்ளன.
இந்தச் சூழலில், அரசுப் பள்ளிகளில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவின் அங்கீகாரத்தை ரத்து செய்வது, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நீக்கம் செய்வது போன்ற அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
"சிறப்புப் பள்ளிகளை மூடியதால் அளவுக்கு அதிகமாக பணியாளர்களுக்கு வேலை இல்லாமல் போகிறது; அவர்களுக்கு மாற்றுப் பணிகளை அளித்தால் மத்திய அரசின் மானியத்தை இழக்க நேரிடும்' என்ற மகாராஷ்டிர அரசின் வாதத்தை ஏற்க முடியாது.
அளவுக்கு அதிகமாக இருக்கும் பணியாளர்களுக்கு மத்திய அரசின் நிதியை எதிர்பாராமல் உரிய வேலையை அளிப்பது மாநில அரசின் கடமையாகும் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...