அழைப்புத் துண்டிப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் நெட்வொர்க் சம்பந்தப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்கத்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), மொபைல் நெட்வொர்க்
நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அழைப்பு தரத்தை சோதனை செய்யும் விதமாக ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒருமுறை நெட்வொர்க் நிறுவனங்கள் அதற்குத் தேவையான ஆவணங்களைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்க வேண்டும். அதன்படி இந்தக் காலாண்டுக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கக் கோரி டிராய், மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் அழைப்பு துண்டிப்பு தொடர்பான புதியச் சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி அழைப்புத் துண்டிப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ.10 லட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும். இது ஒவ்வொரு டவர்களின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
இதுகுறித்து டிராய் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த அக்டோபர் முதல் அழைப்புத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி இந்தக் காலாண்டின் முடிவுகளே, முதன்முறையாக இச்சட்டத்தின் கீழ் பதிவாகும். இதுவரை மாதா மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இனி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சமர்ப்பிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...