வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்'போன்ற, சமூக வலைதளங்கள் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை,
இந்தியன் ஆயின் நிறுவனம் அதிகார பூர்வமாக துவக்கியுள்ளது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும்ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு மற்றும் வணிக பயன்பாடு என, இரண்டு வகை, சமையல் காஸ்சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. தற்போது, வீட்டு வாடிக்கையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களின், கட்டணமில்லா தொலைபேசி, இணையதளம் வாயிலாக, சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளம் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, அதிகாரபூர்வமாக துவக்கியுள்ளது.
தற்போது, இந்த சேவை, டில்லி உட்பட, வட மாநிலங்களில் மட்டுமே உள்ள நிலையில், ஓரிரு தினங்களில், தமிழகத்திலும் செயல்பாட்டுக்குவருகிறது.இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சமூக வலைதளத்தில், சிலிண்டர் பதிவு செய்வது எப்படி என்ற விபரம், நிறுவனத்தின் இணையதளத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது' என்றார்.
கட்டனமில்லா தோலை பேசியா?யார் சொன்னது?
ReplyDelete