விருதுநகரில் 174 நிமிடங்களில் 'உத்தித
பத்மாசனம்' செய்த விருதுநகர் பி.எஸ்.சிதம்பரநாடார் ஆங்கில சீனியர் பள்ளி
மாணவி ஹர்ஷ நிவேதா, அமெரிக்கா பெண்ணின் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.
விருதுநகர்
பி.எஸ்.சிதம்பரநாடார் ஆங்கில சீனியர் பள்ளி மாணவி ஹர்ஷ நிவேதா, 10. இவர்,
ஏற்கனவே யோகாசனத்தில், ஆசியன் புக் ஆப் ரிக்கார்ட் சாதனை செய்துள்ளார்.
இதையடுத்து உத்தித பத்மாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார். இந்த ஆசனத்தை
அமெரிக்காவை சேர்ந்த பெண் 190 விநாடிகள் செய்து கின்னஸ் சாதனை
செய்துள்ளார். அதை முறியடிக்கும் வகையில் 174 விநாடிகளில் செய்து சாதனை
படைத்துள்ளார்.
பி.எஸ்.சிதம்பரநாடார் ஆங்கில சீனியர் பள்ளியில் அரசு டாக்டர்கள் ஜவஹர், உமாமகேஸ்வரி மற்றும் பள்ளி மாணவிகள் முன்னிலையில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். நடுவராக மலேசியாவை சேர்ந்த உலக யோகாசன சம்மேளன ஆசிய செயலாளர் ராதாகிருஷ்ணன் இருந்தார். சாதித்த மாணவியை பள்ளி செயலாளர் கூடலிங்கம், முதல்வர் சாந்தி, யோகா ஆசிரியை இந்திரா வாழ்த்தினர்.
ஹர்ஷ நிவேதா, ''பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் கார்த்திக், ஜோதி, ஆசிரியர் ஊக்கப்படுத்தினர்,'' என்றார்.

ராதாகிருஷ்ணன், ''அமெரிக்க பெண்ணின் சாதனையை
பத்து வயதில் ஹர்ஷ நிவேதா முறியடித்துள்ளார். இந்த சாதனை கின்னஸ் புக் ஆப்
ரிக்கார்டுக்கு அனுப்பப்படும்,'' என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...