அரசு
பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கணினி வழி
தேர்வு மற்றும் மதிப்பீடு முறை அறிமுகமாகிறது. தமிழகத்தில், அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, பள்ளிகளில்
தொழில்நுட்ப வசதி ஏற்படுத்துதல் என, பல புதிய திட்டங்களுக்கு, மத்திய அரசு
நிதி உதவி வழங்குகிறது.
இதற்காக, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், புதிய வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்த வரிசையில், தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், கணினி வழியில் தேர்வும், மதிப்பீடும் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் இறங்கிஉள்ளது. முதல் கட்டமாக, 800 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகளுடன், கணினி வழி தேர்வுக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
மேலும், வினாத்தாளில் கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகையிலான, கேள்விகளும், பதிலுக்கான குறிப்புகளும் இடம்பெறும். கேள்விகளுடன், படங்கள், வண்ண குறிப்புகள் இருக்கும். இந்த வினாத்தாள், 'ஸ்மார்ட்' வகுப்பில் கணினி வழியாக வெளியிடப்பட்டு, அதற்கான பதில்களை தேர்வு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்படுவர்.
மேலும், மாணவர்களின் விடைத்தாள்களை, 'ஸ்கேன்' செய்து, கணினி மூலமாக திருத்தவும், பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான மாதிரி தேர்வு, ௨௦௧௮ மார்ச்சில் நடக்கும் என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...