71.24 கோடி மொபைல் எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் அவர் அளித்துள்ள தகவலின்படி, "கிட்டத்தட்ட 71.24 கோடி மொபைல் எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 82 கோடி வங்கிக் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. 2005ஆம் ஆண்டு பணச்சலவை தடுப்புச் சட்டத்தின்படி தனிநபர் வங்கிக் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைப்பது அண்மையில் கட்டாயமாக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் டிசம்பர் 8ஆம் தேதி கணக்குப்படி, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.
சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் பல சேவைகளைப் பெற மத்திய அரசு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கி வருகிறது. அரசுத் திட்டங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதைத் தடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் இம்மாதம் 15ஆம் தேதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 17ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது. எனவே சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பவர்கள் எண்ணிக்கை அடுத்த மாதத்திற்குள் மேலும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...