இது என்ன புது நெட்வொர்க் தொழில்நுட்பமா என்று தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இது நெட்வொர்க் சார்ந்த தொழில்நுட்பம் அன்று, உணவு சார்ந்த தொழில்நுட்பம் தான்.
நாம் நலமுடன் இருக்க இந்த 5G உணவு முறையினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்பொழுது தான் நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
சரி.... முதலில் 5G யில் வருகின்ற பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.
5G உணவுகள் :
இஞ்சி (Ginger)
பூண்டு (Garlic)
நெல்லிக்காய் (Gooseberry)
கிரீன் டீ (Green tea)
பச்சை மிளகாய் (Green chilly)
அனைத்தும் எளிதாக கிடைக்கும் பொருட்கள் தான். இந்த பொருட்கள் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை
தரவல்லது.
தரவல்லது.
இந்த உணவுகளின் பெயர்கள் எல்லாம் ஜி என்ற எழுத்தில் துவங்குவதால் 5G உணவுகள் :என்ற பெயரைப் பெறுகின்றன!!!
1 இஞ்சி (Ginger)
இது ஒரு சிறந்த கிருமிநாசினி உணவாகும்.
இதனை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் ஊக்கம் பெறும்.
உடலில் உள்ள செல்களின் வயதாகும் செயலினை குறைத்து இளமையாக, வைத்திருக்க உதவுகிறது.
சட்னி மற்றும் தேநீரில் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.
2 பூண்டு (Garlic)
இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
சூப், குழம்பு, சட்னி என அனைத்து வகையான சமையலிலும் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.
3 நெல்லிக்காய் (Gooseberry)
நெல்லிக்காயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
இதை பழச்சாறு, ஊறுகாய் செய்து சாப்பிடலாம்.
4 கிரீன் டீ (Green tea)
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது.
சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வலுவூட்டும்.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.
தினம் ஒரு வேளை கிரீன் டீ அருந்துவது நல்லது.
5 பச்சை மிளகாய் (Green chilly)
நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆண்டி-பாக்டீரியா தன்மை உடையது.
சிறந்த வலிநிவாரணி உணவு பொருளாகும்.
மசாலா சேர்க்கப்படும் அனைத்து வகையான உணவிலும் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.
தவறாமல் இந்த பொருட்கள் உங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நல்வாழ்வு உங்களிடமே இருக்கும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...