பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
பத்து கிலோமீட்டர் தொலைவுக்குள்ளேயே தேர்வு எழுதும் வகையில் 502 தேர்வு
மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளதாக தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை அருகில் உள்ள
வேறொரு பள்ளியின் தேர்வு மையத்துடன் இணைத்து தேர்வு நடத்தும் முறை தற்போது
நடைமுறையில் உள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து
இருபது கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தேர்வெழுதும் நிலை உள்ளது.
இதையடுத்து அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையம் அமைக்க வேண்டும் என பெற்றோர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சென்னையில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நாட்டிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 10கிலோமீட்டர் தொலைவுக்குள்ளேயே தேர்வு எழுதும் வகையில் நடப்புக் கல்வி ஆண்டில் கூடுதலாக 502 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 15ம் தேதிக்குள் தமிழகத்தில் 402இடங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...