குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 5-ம் தேதி சென்னை மாநகரமே
வெள்ளத்தில் மிதக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது.வேலூர்
மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த ஜோதிடர் கே.என்.நாராயணமூர்த்தி என்பவர்,
கா.வெ.சீதாராமய்யரின் பஞ்சாங்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், “2017-ம் ஆண்டு சூறாவளி மற்றும் கனமழை யால்
தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஏரி,
குளங் கள் நிரம்பி வழியும்” என்று கணிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டு
தென்மேற்கு பருவமழையும், கோடை மழையும் இயல்புக்கு அதிகமாக பெய்தது. ஏராள
மான ஏரிகள், குளங்கள்நிரம்பின. சில ஆறுகளில் வெள்ளப்பெருக்கும்
ஏற்பட்டது.கார்த்திகை மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பாதிக்கும் என்று
அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரியை ‘ஒக்கி’
புயல் புரட்டிப் போட்டுள்ளது.
சென்னையை உலுக்கும்
அதேபோல, ‘டிசம்பர் 5-ம் தேதி கனமழை சென்னையை உலுக்கும். மாநகரமே வெள்ளத்தில் மிதக்கும்.வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவார்கள்’ என்றும் அந்த பஞ்சாங்கம் கணித்துள்ளது. இதுகுறித்து ஜோதிடர் கே.என்.நாராயணமூர்த்தி கூறியதாவது:குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகடிசம்பர் 5-ம் தேதி பெய்யும் கனமழை சென்னையை உலுக்கும். வீடுகளுக்குள் வெள்ளம்புகும். மாநகரமே மிதக்கும் நிலை ஏற்படும். 10-ம் தேதி சூறாவளி காற்று வீசும். 19-ம் தேதி அதிகமான உறை பனியால் பாதிப்பு ஏற்படும்.
அந்தமான் பாதிக்கும்.
மேலும், டிசம்பர் 26-ம் தேதி மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி மதுரையில் ஒரு இடம் பாதிக்கும். ஜன.5-ம் தேதி கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஜன.12-ம் தேதி மழையால் அந்தமான் பாதிக்கும்.இவ்வாறு அவர் கறினார

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...