மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நான்கு லட்சம் காலி பணியிடங்கள்
உள்ளன என நேற்று (டிசம்பர் 20) மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு பணியில் காலியாக உள்ள இடங்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு மத்திய பணியாளர் நலன் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். அதில், அரசுப் பணியாளர்களுக்கான ஊதியம் குறித்த ஆண்டறிக்கையின்படி மொத்தம் 36,33,935 பணியிடங்கள் உள்ளன. இதில் 2016ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி சுமார் 4,12,752 காலி பணியிடங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து எந்தவொரு பரிந்துரையும் அரசு பரீசிலனையில் இல்லை என கூறினார்.
இந்த நிலையில், 10,000 பணியிடங்களைக்கொண்ட குரூப் 4 தேர்வுக்கு 19.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும்போது இந்தளவுக்குக் காலி பணியிடங்கள் நிரப்பாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...