தலித்தை திருமணம் செய்தால் ரூ. 2.5 லட்சம் உதவி தொகை வழங்கும் திட்டத்தில் மத்திய அரசு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
உதவி தொகை:
கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு தலித்தை திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. திருமணம் செய்யும் தம்பதிகளில் ஒருவர் தலித் பிரிவை சார்ந்தவராகவும், மற்றவர் தலித் அல்லாத பிரிவை சார்ந்தவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த உதவி தொகையை பெற தகுதியுடையவராவர்.
ஆய்வு செய்ய குழு:
இந்த திட்டம் கடந்த 2013 ஆண்டு முதலே நடை முறைப்படுத்தப்பட்டிருந்தாலும். நடைமுறைபடுத்தப்படும் போது ஆண்டிற்கு 500 தம்பதிகள் வரை பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் கடந்த 3 ஆண்டுகளில் 116 தம்பதிகள் மட்டுமே பயன்பெற்றுள்ளனர். இதையடுத்து அந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு இத்திட்டத்தில் உள்ள பல சிக்கல்களை போக்கும் வகையில் விதிகளை மாற்றயமைத்துள்ளது.

மாற்றியமைப்பு:
அதன் படி இதற்காக விண்ணப்பிக்கும் முறையில் மாநில அரசின் பல்வேறு நடைமுறைகளை மாற்றியமைத்து மாவட்ட நிர்வாகமே நேரடியாக மத்திய அரசிடம் இந்த உதவி தொகையை பெறமுடியும். முதலில் விண்ணப்ப மனு முழுவதும் பரிசீலிக்கப்பட்டதும் உதவி தொகை பெற தகுதியானவர் என முடிவு ஆன பின்பு ரூ.1.5 லட்சம் பணம் வழங்கப்படும். மீதமுள்ள ரூ.1 லட்சம் பணம் இருவரது பெயரிலும் உள்ள வங்கிகணக்கில் செலுத்தப்படும் அந்த பணத்தை 3 ஆண்டுகளுக்கு பின்பே எடுக்க முடியும்.

முன்னர் உதவி தொகை பெறும் தம்பதிகளின் ஆண்டு வருமானம் 5 லட்சமாக இருந்தது. இந்த கட்டுப்பாடு தற்போது உடைக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தலித் அல்லாத யாரும் தலித்தை திருமணம் செய்தால் இந்த உதவி தொகையை பெற தகுதி பெற்றவராவர் என குழு அறிவித்துள்ளது.
Scheme name sollunga sir
ReplyDelete