ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 2018ம் ஆண்டிற்கான சிறப்பு சலுகை விவரத்தை வெளியிட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் தொடங்கிய சிறிது காலத்திலேயே மிகப்பொிய வாடிக்கையாளா் பட்டாளத்தை கவா்ந்து அனைவரையும் ஆச்சாியத்தில் ஆழ்த்தியது. தற்போது ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளா்களை தக்கவைத்துக் கொள்ள 2018ம் ஆண்டில் புதிய சலுகைகளை வெளியிட உள்ளது.
அந்த அதிரடி சலுகை பட்டியல் வருகிற மே மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கான இலவச அழைப்பு மற்றும் 750 ஜி.பி 4ஜி டேட்டா சேவையை அறிவித்துள்ளது ஜியோ.
இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான நெட்வொர்க் இலவச அழைப்புகள் கிடைக்கும். எஸ்.டி.டி. மற்றும் ரோமிங் இலவசமாக செய்யலாம். இந்த வாய்ப்பை ஒரு வருடத்திற்கு பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை ரூ 9,999 -க்கு கிடைக்கும்.
இதைத் தவிர தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ, சிறிய தொகையில் ரூ.19க்கு 0.15 ஜிபி டேட்டா மற்றும் 20 இலவச எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியை ஒருநாளைக்கு பெறும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ரூ.52 ரீசார்ஜ் வவுச்சர் மூலம் ஏழு நாட்களுக்கு 1.05 ஜிபி டேட்டா, 70 இலவச எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதியை பெறும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...