ஜோதிட ரீதியாக 2018-ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ம் கிடைக்கும், வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்களை உண்டாகும் என்பது குறித்து காண்போம்.
மேஷம் ராசிக்காரர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து பலன்களும் நல்லதாகவே இருக்கும். அனைத்து கவனமும் செய்யும் வேலையில் முன்னேறுவதில் இருப்பார்கள்.இவர்கள் அடுத்த வருடத்தை உற்சாகத்துடன் தொடங்குவதுடன், பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.ஆனால் இவர்கள் தனது வாழ்க்கை துணையுடன் நெருக்கம் இருந்தாலும், வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் குறைவாக இருக்கும். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவு பெரிய பிரச்னையாகலாம்.
ரிஷபம் ராசிக்காரர்கள் அடுத்த வருடம் முழுவதும் அஷ்டம சனியின் பிடியில் இருப்பதால், இவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க கூடும்.ஆனால் இவர்கள் எந்தவித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பார்கள். வீண் அலைச்சல் மற்றும் வேண்டாத பிரச்னைகள் இருக்கும்.இவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக விளைவுகளும், வியாபாரிகள் பணம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தந்தையுடன் மனஸ்தாபம் ஆகியவை வரலாம்.
மிதுனம் ராசிக்காரர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அதை சரிசெய்யும் அறிவு மற்றும் நேர்மறை சிந்தனையால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.ஆனால் இவர்களின் வாய் வார்த்தைகளினால் அவர்களின் குடும்பத்தினருடன் சில விடயங்களுக்கு சண்டை சச்சரவுகள் வரலாம்.இந்த ராசிக்காரர்களில் சிலர் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மண வாழ்க்கையில் இணைவார்கள். முதலில் மண-வாழ்க்கை பிரமாதமாக இருந்தாலும், வருட இறுதியில் சிறு வேறுபாடுகள் ஏற்படலாம்.
கடகம் ராசிக்காரர்கள் அடுத்த ஆண்டு நிறைய சவால்களும் சில புதிய திருப்பங்களும் ஏற்படும். ஆனால் இவர்களின் மனம் ஒரு நிலை இல்லாமல் தவிக்கும்.ஆனால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். சிறிய பிரச்னையானாலும் உடனே அதற்கு தீர்வு காண்பது மிகவும் அவசியம்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு புனித யாத்திரையை மேற்கொள்ளலாம். கூட பிறந்தோர் மற்றும் நண்பர்களின் உதவி, ஆதரவு இவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும்.காதல் தொடர்பான விடயத்தில் சில இன்பமான அனுபவங்களுடன், சில சிக்கல்களும் வரலாம். அதனால் ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.ஆனால் இவர்கள் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இவர்கள் செய்யும் வேலையில் கடுமையாக போட்டி இருந்தாலும், வீடு, மனை வாங்கும் யோகம் வருடத்தின் இறுதியில் அமையும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு அவ்வப்பொழுது வரும் அற்பமான பிரச்னைகளை தவிர்த்து இந்த வருடம் பிரமாதமாக இருக்கும்.அடுத்த வருடம் இவர்கள் தன லாபத்தை பெருவார்கள். இவர்களின் புத்தி கூர்மையும், வாக்கு சாதுர்யமும் பல்வேறு வெற்றிகளை தேடித்தரும்.இவர்களின் வாழ்க்கையில் புதிய நண்பர்கள் மற்றும் புதிய தொடர்புகள் உண்டாகும். புது வீடு, மனை வாங்கும் முயற்சியில் முழுமையாக இறங்குவார்கள். ஆனால் படிப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விடயங்களில், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு சில விஷயங்கள் வெற்றி அளிக்கவில்லை எனினும் ஒட்டுமொத்தமாக இந்த வருடம் முன்னேற்றத்தை குறிக்கும்.ஆனால் இவர்களுடன் ஒரு ஆக்ரோஷமும் கலந்து இருக்கும். அதனால் இவர்களின் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் உருவெடுக்கும்.ஆனால் இவர்கள் படைப்பாற்றல், உத்வேகம் மூலம் பல விதமான சவால்களை கையாள்வார்கள். குழந்தைகள் தங்கள் படிப்பிலோ, வேலையிலோ பிரமாதமாக பிரகாசிப்பார்கள்.
விருச்சிகம் ராசிக்காரர்கள் அடுத்த ஆண்டு கெடு பலன்கள் அதிகம் உள்ளது. பண தட்டுப்பாடு, வீண் விரையம், தன நாசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும்.இவர்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை நிகழ்வுகள் நடக்காதலால் ஏமாற்றம் கலந்த கோபம், எந்த விடயத்திலும் நிதானமின்மை உண்டாகும்.
தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மேன்மேலும் வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் வரும். பண வரவு இருந்து கொண்டே இருக்கும். கடினமாக உழைக்கவும் செய்வார்கள்.இவர்களின் அணுகுமுறை மற்றும் பேசும் தோரணையினால் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் பிரச்னைகள் உருவாகலாம்.இது வருட முடிவில் இவர்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். அவ்வப்போது வரும் இடையூறுகளை கவனித்து கொண்டால் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்.
மகரம் ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் முழுவதும் வாழ்க்கை சம்பந்த பல விதமான அனுபவங்களை எதிர்பார்ப்பார்கள்.இவர்களுக்கு உடல் ஆரோக்கியக் குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் தொல்லை கொடுக்கலாம். வெளிநாடு மூலம் பல விதத்தில் ஆதாயம் கிடைக்க உள்ளது.வேலை செய்யும் இடத்தில் இவர்களின் அதிகாரம் ஓங்கும், ஆனால் அது சர்சையிலோ, விவாதத்திலோ கொண்டு போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
கும்பம் ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் அனைத்து விதத்திலும் சிறந்ததாக இருக்கும். இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், சேகரிப்பதிலும் முழு கவனம் செலுத்துவார்கள்.இவர்கள் ஆன்மீகம் உட்பட, அனைத்து விடயத்திலும் ஆர்வம் காட்டுவார்கள். மேல் அதிகாரிகள் இடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவார்கள். இவர்கள் எதிர்ப்புகள் மற்றும் தடைகளை எதிர்த்து சகல சுகத்தையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள்.
மீனம் ராசிக்காரர்களுக்கு அடுத்த வருடம் சோதனைகளும், சாதனைகளும் கலந்து வரும். அதனால் இவர்கள் வருடம் முழுவதும் உடல் நலனிலும், ஆரோகியத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.இவர்களின் அந்தரங்க வாழ்க்கை குலையலாம். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் கடுமையான உழைப்பை எதிர்பார்க்கலாம். ஆனால் வருட இறுதியில் இவர்களின் வாழ்க்கையில் சிறப்பான திருப்பங்கள் வரும். பண வரவு சீராக இருக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...