ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 16 கோடியைக்
கடந்துள்ளதாக ஜியோ நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானி சரியாக ஒரு ஆண்டுக்கு முன்னர் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் தனது ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கை அறிமுகம் செய்தார். வாய்ஸ் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டதால் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நெட்வொர்க் பயன்பாட்டாளர்களும் ஜியோவுக்கு மாறத் தொடங்கினர். இதனால் சேவை தொடங்கிய 8 மாதங்களுக்குள்ளேயே 10 கோடி சந்தாதார்களைப் பெற்று ஜியோ சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியைத் தாண்டியுள்ளதாக முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 40ஆம் ஆண்டு விழா நேவி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்பரேட் பூங்காவில் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. 50,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பாலிவுட் நடிகர் சாருக் கான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்வில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியுடன் சாருக் கான் மேடையில் பேசிக்கொண்டிருக்கையில், ரிலையன்ஸ் ஜியோவில் 10 கோடி சந்தாதார்கள் இருப்பதாகப் பெருமைப்படக் கூறினார். அப்போது குறுக்கிட்ட ஆகாஷ் அம்பானி, இப்போது ஜியோவில் 16 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாகப் பதிலளித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...