ஏடிஎம் பரிவர்த்தனையில் ஏற்படும் தோல்வி குறித்து புகார் அளித்தால் ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அவசர தேவைக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது சில சமயங்களில் பணப் பரிவர்த்தனை தோல்வி அடையும். அப்போது வங்கி கணக்கில் இருந்து பனம் பிடித்தம் செய்யப்படும். பிடித்த செய்யப்பட்ட பணம் குறிப்பிட்ட நாட்களுக்குள் திரும்ப வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
சில சமயங்களில் புகார் அளித்த பின்னர் பிடித்தம் செய்யப்பட்ட பணம் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும். இந்நிலையில் இதுபோன்ற சமயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதாவது ஏடிஎம் பணப் பரிவர்த்தனை தோல்வி அடைந்தால் புகார் அளித்த 7 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும். ஒருவேளை 7 நாட்களில் பணம் திரும்ப செலுத்தப்படவில்லை என்றால் ரூ.100 இழப்பீடு வழங்கப்படும். பணப் பரிவர்த்தனை தோல்வி குறித்த புகார் 30 பரிவர்த்தனை தோல்வி அடைந்த 30 நாட்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...