மேஷம்
துணிச்சலான
முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சுப
நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகன வசதிப் பெருகும். உங்களால்
மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும்.
உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
ரிஷபம்
இங்கிதமாகப்
பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள்
மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில்
நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
மிதுனம்
மதியம்
1.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கனமாக இருக்க
வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு
முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில்
ஓரளவு வேலைச்சுமை குறையும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
கடகம்
குடும்பத்தினரை
அனுசரித்துப் போங்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக
இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.42 மணி முதல்
ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
சிம்மம்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை
இப்பொழுது சந்திக்க நேரிடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை
அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் பாராட்டுவார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
கன்னி
தன்னம்பிக்கையுடன்
பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப்
பொழிவார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர்
செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில்
மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
துலாம்
உணர்ச்சிப்பூர்வமாகப்
பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர்
முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள்
தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
விருச்சிகம்
மதியம்
1.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்.
தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். தடைப்பட்ட வேலைகளை
விடாமுயற்சியால் முடிப்பீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும்.
உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
தனுசு
குடும்பத்தில்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.
வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பழைய
சிக்கல்கள் தீரும். மதியம் 1.42 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால்
முன்எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
மகரம்
கனிவானப்
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்
தொடங்குவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் நட்பு
கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
கும்பம்
குடும்பத்தில்
உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள்.
அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை
விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
மீனம்
எதிர்ப்புகள்
அடங்கும். சகோதரி உதவுவார். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும்
ஆதாயமும் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய
பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஆதரிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...