Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 3.11.2017

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். அசுவினி நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மிதுனம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கடகம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
சிம்மம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
கன்னி
சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
துலாம்
மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
விருச்சிகம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
தனுசு
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை விலகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
மகரம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
கும்பம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
மீனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive