மேஷம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக
இருப்பார்கள்.
பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
ரிஷபம்
மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு
வெற்றி காண்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.
கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவர்கள்
நண்பர்களாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது
தொடர்பு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
கடகம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க
முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உதவிக் கேட்டு உறவினர்களும்
தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல்
இருப்பது நல்லது. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க
வேண்டாம்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
சிம்மம்
சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில்
உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண
முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி
வருவார்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
கன்னி
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில்
உற்சாகம் பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்களின்
நட்பு கிட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை
தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
துலாம்
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். ஆன்மிக நாட்டம்
அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களைச்
சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபார ரீதியாக
சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
விருச்சிகம்
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். வர வேண்டிய பணத்தை போராடி
வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
தனுசு
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள்
உறுதுணையாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது லாபகரமாக அமையும். புது
வாகனம் வாங்குவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில்
புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
மகரம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும்
நீங்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
அழகு, இளமைக் கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில்
தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
கும்பம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது.
கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து விலகும். புது முதலீடுகளை
தவிர்க்கவும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில்
வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
மீனம்
எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள்.
உறவினர், நண்பர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க
முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களுடன் மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...