Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 16.11.2017

மேஷம்
மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
ரிஷபம்
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
மிதுனம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
கடகம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
சிம்மம்
துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
கன்னி
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சச்சரவு நீங்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
துலாம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
விருச்சிகம்
சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
தனுசு
குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்கள் உதவுவார்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
மகரம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
மீனம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive