மேஷம்
குடும்பத்தினருடன்
சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின்
உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ்
ரிஷபம்
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து
செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,கிரே
மிதுனம்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். மகளுக்கு நல்ல வரன்
அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி
முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு
கடகம்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை
ஓங்கும்.
அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,நீலம்
சிம்மம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
சொந்த&பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த உதவிகள்
கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,மயில் நீலம்
கன்னி
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும்.
குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அஸ்தம்
நட்சத்திரக்காரர்களுக்கு உடல் நலம் பாதிக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள்
அதிகரிக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக
விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்
துலாம்
கணவன்-மனைவிக்குள்
கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி
செய்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிர்மறை எண்ணங்கள்
வந்துப் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்:3அதிஷ்ட
நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன்
விருச்சிகம்
எதையும்
சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி தங்கும்.
நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வெளியூரிலிருந்து
நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள்
முக்கிய அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்: வைலெட்,இளஞ்சிவப்பு
தனுசு
உணர்ச்சிகளை
கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை
சந்தித்து மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்பை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்:9
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ப்ரவுன்
மகரம்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில்
எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம்
கிடைக்கும்.
அதிஷ்ட எண்:6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,பிங்க்
கும்பம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பேச்சில் காரம் வேண்டாம்.
சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில்
ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து
நீங்கும்.
அதிஷ்ட எண்:7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,ப்ரவுன்
மீனம்
பிள்ளைகள்
கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
பயணங்கள் திருப்திகரமாக அமையும். விருந்தினர் வருகையால் வீடு
களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்
புது அதிகாரி உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்:1
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,பச்சை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...