தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு: கிராம நிர்வாக அலுவலர், குரூப்-4 பணிகளில் 9,351 காலி இடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் வரித்தண்டலர், வரைவாளர் மற்றும் நில அளவர், என மொத்தம் 9,351 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்காக, எஸ்.எஸ்.எல்.சி கல்வித்தரத்திலான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (குரூப்-4) நடத்துவதற்கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கான கல்வி மற்றும் பிற தகுதிகள் வருமாறு:-
பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு, கூடுதலாக தட்டச்சு, சுருக்கெழுத்து தொழில் நுட்பக் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அனைத்துப் பதவிகளுக்கும் ஒரே விண்ணப்பம் தான் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க டிசம்பர் 13-ந்தேதி கடைசி நாள். தேர்வு வருகிற 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடை பெறுகிறது. மாவட்ட மற்றும் தாலுகாக்களில் நடைபெறும். விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு பணியாளர் தேர்வாணைய இணைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நிரந்தரப் பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...