ஃபேஸ்புக் நிறுவனம் ஸ்டீர்க்ஸ் என்ற புதிய வசதியை சோதனை செய்ய உள்ளது.
முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் தொடர்ச்சியாக பலவேறு புதிய வசதிகளை சோதனை செய்து வருகிறது. அதன்படி தற்போது ஸ்டீர்க்ஸ் என்ற புதிய வசதியைச் சோதனை செய்ய உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. ஸ்னேப்சாட்டில் இதற்கு முன்னரே ஸ்னேப்ஸ்டீர்க்ஸ் என்ற வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
அதிலுள்ள வசதிகளை தான் சோதனை செய்ய உள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். ஆனால் அதில் உள்ளது போன்றே இல்லாமல் இதில் எமோஜிகளை பயன்படுத்த உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்டீர்க்ஸ் என்ற வசதியானது தொடர்ச்சியாக ஒரு பயனர் அவரின் நண்பர்களுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் பொழுது எத்தனை நாட்கள் அந்த நபருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றம் செய்து வருகிறார் என்று பாப்அப் நோட்டிஃபிகேஷன் முறையில் அந்த பயனர்களுக்கு காண்பிக்க உதவும். அதுமட்டுமின்றி அந்த நபருடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்யுமாறும் நோட்டிஃபிகேஷன் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும்.
இந்த வசதியை ஸ்னேப்சேட் நிறுவனம் நீண்ட நாட்களாக இந்த வசதியைப் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது ஃபேஸ்புக் நிறுவனம் அதனை சோதனை செய்ய உள்ளது. இந்த தகவல் வெளியான பிறகு பல்வேறு கருத்துக்களை பயனர்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனம், இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தப்பட்ட ஸ்டோரி என்ற வசதியை பயன்படுத்தி வருவது போல் தற்போது இந்த வசதியை பயன்படுத்த உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...