பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்
CLICK HERE TO DOWNLOAD JUDGMENT COPY
அரசு அங்கீகார எண்:125/2001
பதிவு எண்: 100/1992
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வணக்கம்.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் இன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் தடையாணை நீக்கப்பட்டுள்ளது. அதே சமயம் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள சில கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன் முழு விவரங்கள் உரிய ஆணை கிடைத்த பின்புதான் தெரிய வரும். பதவி உயர்வில் முதுகலை ஆசிரியர்களாகச் சென்றவர்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்குவது குறித்து எதுவும் சொல்லப் படவில்லை எனத் தகவல் கிடைத்துள்ளது. எது எவ்வாறாகினும் ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றத்தால் ஓர் இடைக்கால ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இரு ஆணைகளுக்கும் ஒற்றுமை வேற்றுமைகள் இருந்தால் பணியிடங்களை நிரப்புவது சாத்தியமில்லை. நம்முடைய நீதிப் போராட்டம் இன்னும் எவ்வுளவோ இருக்கிறது.
வழக்கின் முழு விவரத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத சிலரின் பதிவுகள் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்குக் கூட இருக்கும். எதையும் சட்டை செய்யத் தேவையில்லை. இன்று இரவுக்கு வழக்கறிஞரிடம் பேசிய பின்பு அடுத்த கட்ட நடவடிக்கையை நமது இயக்கம் மேற்கொள்ளும். .
நன்றி.
இவண்....
கழக நிறுவனர் திரு. சி.ராமமூர்த்தி, திரு.
சோ.முருகேசன்,மாநில பொதுச் செயலாளர், திரு. த. உதயசூரியன்
மாநில தலைவர், திரு.ஜெ.சுப்பிரமணியன், மாநிலச் செயலாளர்,
திரு.சி. ராமதாஸ்
மாநில பொருளாளர்
திரு. ஜி. வி. சோமசேகர்
மாநில தலைமையிட செயலாளர், திரு.இரா.இராமமூர்த்தி, மாநில சட்டச் செயலாளர் , மாநில மகளிர் அணி செயலாளர் சி.ஹேமலதா, மற்றும் அனைத்து மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...