Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய திட்டங்களுடன் BSNL!

இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் நீடிக்கும் போட்டியைச் சமாளிக்கும்
வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நுழைந்த பிறகிலிருந்தே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதைச் சமாளிக்கும் வகையில் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

ரூ.186 திட்டத்தில் ரீசார்ஜ் செய்த முதல் 28 நாள்களுக்குத் தினசரி 1 ஜி.பி. அளவிலான டேட்டாவைப் பெறலாம். மேலும், 180 நாள்களுக்கு வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்.டி.டி. அழைப்புகள் இலவசமாகக் கிடைக்கும். ரூ.485 திட்டத்தில் ரீசார்ஜ் செய்த முதல் 90 நாள்களுக்குத் தினசரி 1 ஜி.பி. அளவிலான டேட்டா இலவசமாகக் கிடைக்கும். மேலும், 180 நாள்களுக்கு வரம்பற்ற அழைப்புகளும் இலவசம். இத்திட்டங்கள் வாயிலாக ஜியோ நெட்வொர்க் இணைப்புக்கு மாறும் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் முயற்சியில் பி.எஸ்.என்.எல். இறங்கியுள்ளது.

மறுபுறம், தொடக்கத்தில் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வந்த ஜியோ, தற்போது தனது சேவைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதால் அதில் இணையும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




2 Comments:

  1. தவறான செய்தி 186 க்கு லோக்கல் கால் இலவசம். 1GP மட்டுமே

    ReplyDelete
  2. Bsnl or AirTel இந்த இரண்டில் எது Best .Becoz port plan மாற முடிவு செய்துள்ளேன். Kindly msg sir.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive