Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வில் பின்தங்கியோருக்கு விரைவில் சிறப்பு வகுப்பு

கோவை : 'குறைதீர் கற்றல் தேர்வில், சொற்ப மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதால், சிறப்பு வகுப்புகள் மூலம், விரைவில் பயிற்சி அளிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் குறைதீர் கற்றல் தேர்வு நடத்தப்படுகிறது.
ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடத்தில்,
தலா 45 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் இடம்பெறும்.
இதில், 15 மதிப்பெண்களுக்கு கீழ், பெற்ற மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' மூலம், சிறப்பு பயிற்சிகள் அளிப்பது வழக்கம். இதன்
மூலம், பத்தாம் வகுப்பில், பொதுத்தேர்வை எதிர்
கொள்வதில், மாணவர்களுக்கு சிரமம் இருக்காது.
நடப்பாண்டில், இம்மாத துவக்கத்தில், குறைதீர் கற்றல் தேர்வுகள், அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நடந்தன. இதில், பின்தங்கிய மாணவர்களின் விபரங்கள், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. இவர்கள், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள், பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ளதால், சிறப்பு கையேடு தயாரித்து, வகுப்பு ஆசிரியர்கள் கொண்டு, பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'சமச்சீர் கல்விமுறை அமலுக்கு வந்தபின், எட்டாம் வகுப்பு வரை, ஆல்பாஸ் செய்யப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பில், பாடத்திட்டத்தின் கடினத்தன்மையால், கற்றலில் பின்தங்கிய மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு, மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தி, ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பாண்டில், இம்மாணவர்களுக்கு சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பயிற்சி வகுப்புகள் துவங்கும்' என்றனர்.




1 Comments:

  1. நன்றி! நன்றி!
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக கல்வி செய்திக்கு மனமார்ந்த நன்றி !நன்றி!🙏🙏🙏🙏🙏

    இதுவரை நம் கூட்டமைப்பில் 700 க்கும் மேற்பட்டோர்
    2013 Tet க்கு முன்னுரிமை கோரி கடிதம் கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக அனைவரையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
    2013 TET க்கு முன்னுரிமை முன்னுரிமை முன்னுரிமை முழு முன்னுரிமை யை மையபடுத்தியே போராட்டம் நடத்தி வருகிறோம்.

    வீண் விமர்சனங்கள் நம்பாதீர்! சிந்தீப்பீர்!

    வெயிட்டேஜ்ஆதரவாக செயல்படுகிறார்கள்
    வெயிட்டேஜிக்கு எதிராக செயல்படுகிறார்கள்
    வயதானவர்களுக்கு வேலை கேட்கிறார்கள்
    மதிப்பெண் தளர்வை எதிர்கிறார்கள்.
    பட்டதாரி ஆசிரியருக்கு மட்டும் வேலை கேட்கிறார்கள்.
    என்ற வதந்தியை பரப்புகிறார்கள்.

    2013 ku முன்னுரிமை அதுவும் முழு முன்னுரிமை அதை முன்னிலைபடுத்தியே போராடுகிறோம். போராடுவோம்.
    உண்மை நிலை அறிய:
    (2013 Tet Poratam) என கூகுளில் தேடி YouTube ல் உள்ள பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அவற்றை பார்த்து சந்தேகங்களை தெளிவு படுத்தி கொள்ளவும்.

    தொடர்ந்து பல கட்ட தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். போராட்டம் மற்றும நமது கூட்டமைப்பின் பணிகள் மற்றும் TeT சார்ந்த தகவலை அறிய உடனே கீழ்கண்டwhatsapp link ல் இணைவீர். நன்றி


    மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
    இளங்கோவன் 8779465
    வடிவேல் சுந்தர் 8012776142
    பொருளாளர்
    பிரபாகரன்
    9047294417.


    Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/By0gOkFu0yoEeaEYwL6KG1
    2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive