''அரசு
பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' மற்றும் வெளிநாடு கல்வி சுற்றுலா
திட்டங்கள் துவங்கப்படும்,'' என, அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.
திருப்பூர் மாவட்டத்தில், பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ - மாணவியர் மற்றும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, திருப்பூர் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியில், நேற்று நடந்தது.
இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: சிவில் சர்வீஸ் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் வெற்றி பெறும் வகையில், மாவட்ட நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் துவங்கப்படும். டிச., இறுதிக்குள், 100 மையங்கள் துவக்க திட்டமிட்டுள்ளோம்.
போட்டி தேர்வு பயிற்சி மையங்களில் சேர, 'ஆன்லைனில்' விண்ணப்பித்த, 73 ஆயிரம் பேருக்கு, 'லேப்டாப்' வழங்கப்படும். 3,000 பள்ளிகளில், தலா இரண்டு லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் கிளாஸ்'அமைக்கப்படவுள்ளது. தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், 10ம் வகுப்பு மாணவர்கள், 15 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய்; 12ம் வகுப்பு மாணவர்கள், 15 பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்த நாளில் அறிவிக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான, 'ஹெல்ப் லைன்' என்ற புதிய திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளது. அறிவியல் துறையில் பயனடையும் வகையில், 100 மாணவர்களை தேர்வு செய்து, 15 நாள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.இவ்வாறு, அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...