வேலூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பத்துக்கு நிதியுதவி
வழங்கப் பரிந்துரை செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன்
தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் மாணவிகளின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து பேசிய அவர், “முதல்கட்ட விசாரணையில் இரண்டு ஆசிரியைகள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எஃப்.ஆர்.ஐ. பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், முதலமைச்சரின் நிதியுதவிக்காகப் பரிந்துரை செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை (நவம்பர் 27) மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது என மாவட்டக் கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்துள்ளார்.
பேசாமல் கல்வி அதிகாரிகளே வந்து தினமும் பாடம் நடதுங்களேன். ஒவ்வொரு ஆசிரியரின் உன்மையான வேதனை அப்போதான் தெரியும். ஆசிரியர்கள் கல்வி அலுவலக பணிகளை சென்று கவனிக்கட்டும்.
ReplyDeleteஆசிரியர்கள் என்ன பலி ஆடுகளா? சங்கம் என்ன செய்கிறது?
ReplyDelete