Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.

✍ஆசிரியர் தொழிலும் , அதிலுள்ள சிக்கல்களும்.✍
ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல வெலுங்க என்று கூறியது ஒரு காலம் .

அப்போது மாணவர்கள் படித்தனர் , தற்கொலை இல்லை.
மனித உரிமை ஆணையம் என்று ஒன்று வந்தது , அதன் நோக்கம் சரியே ஆனால் ?

✍மாணவர்களை அடிக்க கூடாது என்றீர்கள் சரி என்றோம் , ஆனால் அவன் அடிக்க தொடங்கினான் , ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான் ஆனாலும் அவனுக்கு தன்டனையில்லை சிறுவன் என்று சீர்திருத்த பள்ளியில் இடம்.
✍அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றீர்கள் சரியேன்றோம், ஆனால் அவன் எங்களை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான் எங்களால் தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை அவன் சின்னப் பையன் எங்றீர்கள்.
✍ தண்டிக்கவும் கூடாது , திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும்  தண்டனையா?
✍இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பையனை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?
✍தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவானை கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா?
✍ ஒழுங்கீன செயல்களில் இடுபடும் பையனை தட்டிக் கேட்க , தண்டிக்க  பெற்றோருக்கு உரிமை உண்டு ,ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் இடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லையா .  
✍தினம் தினம் குறைந்தது 500 பிள்ளைகளுடன் நாங்கள் படும் பாட்டை யார் அறிவார்.
சமூகமே எங்கள் பிள்ளைகளையும் மறந்து உங்கள் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக உழைக்கும் எங்களை போற்ற வேண்டாம், தூற்றாமலாவாது இருங்கள் .
✍என்று உங்கள் குழந்தைகளுக்காக மனவலியையும் மறந்து பாடுபடும் ஆசிரியர் சமூகம்.✍




12 Comments:

  1. Results percentage yena Officer torture aasiriyargalukku. Aasiriyar suicide psnnikondal kettka aal illai

    ReplyDelete
  2. உண்மையான பதிவு நிச்சயம் நிலை மாற வேண்டும் இல்லை எனில் எதிர்கால சமுதாயம் இரும்பு கம்பிகளின் பின்னால் தான் இருக்கும்.

    ReplyDelete
  3. உண்மையான பதிவு

    ReplyDelete
  4. உண்மை தோழா
    குறை கூறும் நபர்களூக்கு புரிய
    இது போன்ற க்ட்டுரைகள் நிறைய
    வர வேண்டும் தோழா
    நன்றி

    ReplyDelete
  5. உண்மையான பதிவு

    ReplyDelete
  6. உண்மையான பதிவு

    ReplyDelete
  7. நல்ல பதிவு. ஒழுக்கம் இல்லாத மன தைரியம் இல்லாத சமூகம் உருவாகி வருகிறது என்பது வருந்தத்தக்கது.

    ReplyDelete
  8. 100% உண்மை.மேலும் தொடக்கப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.இதே நிலை தொடர்ந்தால் நிச்சயமாக ஆசிரியர்களின்தற்கொலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  9. உயர் அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் என்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார்.முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களிடம்என்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார்.தலைமை ஆசிரியர்கள், ஆசிரியரிடம்,ன்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார்.ஆசிரியர் மாணவர்களிடம்,ன்ன செய்வீர்களோ தெரியாது 100சதம் தேர்ச்சி என்பார். மாணவர்களோ,எங்களைப் படிக்கச் சொன்னால் தற்கொலை செய்து கொண்டு உங்களை மாட்டி விடுவோம் என்பார்கள்.-பாதிக்கப்பட்ட ஆசிரியர் ,ஆசிரியைகள் சார்பாக.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive