மிலாதுநபி விடுமுறை மாற்றப்பட்டதால் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 23) அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான மிலாது நபி தமிழகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படவிருந்தது. அரசு தலைமை ஹாஜியின் கோரிக்கை காரணமாக டிசம்பர் 1 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு நவம்பர் 20 ஆம் தேதி அறிவித்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலையில் 2ஆம் தேதி நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் மிலாது நபி விடுமுறை காரணமாக டிசம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக நவம்பர் 3 ஆம் தேதி நடக்கவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் நவம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் நவம்பர் 4 ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் நவம்பர் 19ஆம் தேதி யுபிஎஸ்சி தேர்வுகள் நடக்கவிருந்ததால் அண்ணா பல்கலை தேர்வுகள் நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...