Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குருவென எம்மை வணங்கவும் வேண்டாம்,எமனென எம்மிதயம் துளைக்கவும் வேண்டாம் - கமல்

ஆசிரியர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றி கமல்;




பள்ளிவரும் பிள்ளைகள்,
பயின்றுவரும் கிள்ளைகள்;
தற்கொலைசெய்து சாவு!
இக்கொலையில் ஆசான்தானே காவு?
பள்ளி வருவது படிக்க- கூடாது
சுள்ளி எடுத்து அடிக்க,
ஆசிரியருக்கு கட்டுப்பாடு
ஆசு களைவதில் தட்டுப்பாடு ;
ஒழுக்கம் கற்றுக் கொடுக்க வேண்டும்,
வழுக்கிப் போனால் தடுக்க வேண்டும்;
தடுக்காவிட்டால் வேலைப்பழி!
தடுத்துவிட்டால் கொலைப்பழி?
கண்டிக்கவும் உரிமையில்லை!
தண்டிக்கவும் உரிமையில்லை!
அழைத்துவா பெற்றோரை,
அறியட்டுமுன் அக்கப்போரை;
இதுதான் ஆசானெடுத்த முடிவு!
இனிமேல் அவருக்குண்டா விடிவு?
'காப்பியடித்ததை' கண்டறிந்தால்
கைபிடித்திழுத்த 'காமுகன்' பட்டம்!
'தப்பென' கண்டித்தால்
தற்கொலையால் 'காலன்' பட்டம்!
அழியாத கல்வி கொடுத்தவன்,
அழிகிறானே குற்றம் தடுத்தவன்;
போதிக்கிறவன் பேச்சு,
பேதலித்தே போச்சு;
குருவென எம்மை வணங்கவும் வேண்டாம்,
எமனென எம்மிதயம் துளைக்கவும் வேண்டாம்;
எம்மிதயமும் சதையால்தானே ஆனது-இன்று
எம்வாழ்வுதானே சிதையாகிப் போனது!
வேதனையுடன்,
கமல்




13 Comments:

  1. மிக அற்புதம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல மனம் வாழ்க வாழ்த்துக்கள் கமல்,பள்ளியில்
      நீதி போதனை வகுப்புகள் தேவை

      Delete
  2. நமக்காக குரல் கொடுத்த முதல் உள்ளம்.நன்றி கமல்!!

    ReplyDelete
  3. இந்த கவிதைக்கு சொந்தக்காரர் கமல்தானா?

    ReplyDelete
  4. ஆசிரியர் நண்பர் முத்துராமன் எழுதிய கவிதை இது.

    ReplyDelete
  5. Kavithai malaiyai polikirathu kamalin varthaikal. Thalaiva valka valamudan.


    ReplyDelete
  6. Aasiriyar muthuraman eluthiya kavithai. Thiru Kamalhassan alla.

    Admin admit the mistake and change

    ReplyDelete
  7. Nandrikal pala kodi thala

    ReplyDelete
  8. ஆசிரியர்கள் மனதின் பிரதிபலிப்பு

    ReplyDelete
  9. மிக மிக அரூமையான பதிவு.
    ஆசிரியர்களின் சார்பாக நன்றி

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive