கோவை: மத்திய அரசு, ’வித்யா லட்சுமி’ எனும் இணையதளத்தை கடந்த, 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
அதன்படி, www.vidyalakshmi.co.in எனும் கல்விக்
கடன் பெறுவதற்கான இணையதள முகவரியை, பெரும்பாலான மாணவர்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.மத்திய நிதி துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கும், ஏழ்மை மற்றும் நடுத்தர மாணவர்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் கல்விக் கடன் பெறமுடியும்.இந்த இணையதளத்தின் முக்கியத்துவத்தை, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அந்த வகையில், கல்வி நிறுவனங்களின் இணையதளம், வலைதளம் உள்ளிட்டவற்றில் வித்யா லட்சுமி இணையதள முகவரியை தெரியப்படுத்த வேண்டும் என, பல்கலை மானியக்குழு செயலர் தாகூர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...