சீன எல்லையில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் சில முக்கியமான ஆண்ட்ராய்ட் ஆப்களைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உளவுத் துறை அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆண்ட்ராய்ட் ஆப்கள் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தகவல் திருட்டுகள் நடத்த வாய்ப்புள்ளதால் ராணுவ வீரர்கள் வீசாட், ட்ரூகாலர், யுசி பிரவுசர், யுசி நியூஸ் போன்ற ஆப்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுதப்படை, இந்தியா-திபெத் எல்லை காவல் படையினர் 4,057 கிலோமீட்டர் நீளமுள்ள லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதப்படையினர் ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் கணினிகள் மூலம் ஏற்படும் அச்சுறுத்தலைத் தடுக்கத் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின்படி தொடர்ந்து பல்வேறு உத்தரவுகளை வீரர்களுக்கு வழங்கிவருகிறது.
ராணுவ வீரர்கள் மொபைல் மற்றும் கணினியைப் பயன்படுத்தும்போது கவனமாகச் செயல்பட வேண்டும். சீனாவில் உருவாக்கப்பட்ட அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய விமானப்படை சார்பில் அதிகாரிகள், விமானிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரும் சியோமி ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...