ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து காப்பீட்டு திட்டத்தை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன வெளியிட்டுள்ள அறிக்கையில், பேடிஎம் மூலம் வாங்கப்படும் ஸ்மார்ட் போன்களுக்கு ஓராண்டுக்குள் எதிர்பாராதவிதமாக சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் திருட்டு, செல்போன் திரை சேதம் உள்ளிட்டவற்றிற்கு வாடிக்கையாளர்கள் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.ஆப்பிள், ஜியோமி, மோட்டோரோலா, விவோ உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த விபத்து காப்பீடு வசதியைப் பெறலாம் என்று பேடிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் சின்ஹா கூறியுள்ளார். இதற்காக ஸ்மார்ட்போனின் மதிப்பில் இருந்து 5 சதவீதத்தை பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். பேடிஎம் மால் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த காப்பீடு அளிக்கப்படுகிறது என்று அமித் சின்ஹா கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...