சைனிக் பள்ளியில் வரும் 2018-19
கல்வியாண்டில் 6 மற்றும் 9-ம் வகுப்பில் சேருவதற்காக மாணவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும்,
தமிழக அரசும் இணைந்து சைனிக் என்ற உண்டு உறைவிட பள்ளியை நடத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை
வட்டம், அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் வரும் 2018-19
கல்வியாண்டில் 6மற்றும் 9-ம் வகுப் பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை
நடைபெற உள்ளது.
2018 ஜூலை 1-ம் தேதியன்று 10 வயது முடிந்தும் 11 வயது
முடியாமலும் ( 2007 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2008 ஜூலை 1-ம்
தேதிக்குள்பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6-ம்
வகுப்பில் சேர முடியும்.அதேபோல், 2017 ஜூலை 1-ம் தேதியன்று 13 வயது
முடிந்தும், 14 வயது முடியாமலும் (2004 ஜூலை 2-ம் தேதியிலிருந்து 2005 ஜூலை
1-ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருந்து, அங்கீகாரம் பெற்ற
பள்ளியில் 8-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் 9-ம்
வகுப்பில் சேரலாம்.6-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ஆங்கிலம்
அல்லது இந்தியில் எழுதலாம். 9-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை
ஆங்கிலத்தில் மட்டுமே எழுதமுடியும். 6-ம் வகுப்பில் சேர 90 மாணவர்களும்,
9-ம் வகுப்பில் சேர 15 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படும் மாணவர்களது பெற்றோரின் மாத வருமான
அடிப்படையில், அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை உதவித் தொகை
வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேடு பெற
பொதுப் பிரிவினர் ரூ.400-ம், எஸ்சி எஸ்டி பிரிவினர் ரூ.250-ம் கட்டணமாக
செலுத்த வேண்டும்.விண்ணப்பப் படிவங்கள் வரும் 30-ம் தேதி
வரைவிநியோகிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள்
‘முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர், உடுமலைப்பேட்டை வட்டம்,
திருப்பூர் மாவட்டம்-642102’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க
வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு 04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணை
தொடர்பு கொண்டோ, அல்லது இணையதளத்தை
(www.sainikschoolamaravathinagar.edu.in) பார்த்தோ தெரிந்துகொள்ளலாம்
என்று பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...