''மதுரையில் பள்ளிகளுக்கு சொத்துவரி விலக்களிக்க தாக்கலான வழக்கில்,
மாநகராட்சி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உத்தரவிட்டுள்ளது.
கோச்சடை மேலக்கால் மெயின் ரோடு ஜெயின்ட் ஜான்ஸ்
மெட்ரிக் பள்ளி தாளாளர்தாக்கல் செய்த மனு:சொத்துவரி செலுத்தக்கோரி எங்கள்
பள்ளிக்கு மாநகராட்சி கமிஷனர் 2016 ல் நோட்டீஸ் அனுப்பினார். நாங்கள் கல்வி
சார்ந்த அறப்பணியில் ஈடுபட்டுள்ளோம். கட்டடத்தை கல்வி கற்பிக்கும்
நோக்கத்திற்குபயன்படுத்துகிறோம். சொத்துவரி செலுத்துவதிலிருந்து கல்வி
நிறுவனங்களுக்கு விலக்களிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. கமிஷனரின் நோட்டீைச
ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இதுபோல் 63 தனியார்
பள்ளிகளின் நிர்வாகங்கள் சார்பில் தனித்தனி மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டன.நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு:மதுரை மாநகராட்சி சட்டப்படி
சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி,
மாநகராட்சிநிர்வாகத்திடம் மனுதாரர்கள் 2 வாரங்களில் மனு அளிக்க வேண்டும்.
அதை சட்டத்திற்குப்பட்டுகமிஷனர் பரிசீலிக்க வேண்டும். தங்கள் கோரிக்கைக்கு
வலுசேர்க்கும் ஆவணங்களை மனுதாரர்கள் தாக்கல்செய்ய வேண்டும். மனுதாரர்கள்
விளக்கமளிக்க போதிய வாய்ப்பளித்து, அது தொடர்பான நடைமுறைகளை 6வாரங்களில்
மாநகராட்சி நிர்வாகம் முடிக்க வேண்டும்.
கோரிக்கையை மாநகராட்சி கவுன்சில்அனுமதிக்கும்பட்சத்தில், மனுதாரர்கள் சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கிற்கான உரிமையை பெறுவர். இல்லாதபட்சத்தில் சட்டத்திற்குட்பட்டு சொத்து வரியைவசூலிக்க கமிஷனர் நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது, என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...