Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உலகிலேயே இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது!

காற்று மாசுபடுதலில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும், பெரும் கேடு விளைவிக்கக் கூடிய கந்தக டை-ஆக்சைடை, அதிகளவில் காற்றில் கலக்கச் செய்வதில், உலகிலேயே இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.




அமெரிக்காவை சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்த விபரம் வெளியாகியுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் அதிகளவில் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றுவதில், முதலிடத்தில் இருந்த சீனாவில், தற்போது அது 75 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் இந்தியாவின் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றம், 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, தற்போது உலகளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2010-ல், இரண்டாமிடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா, தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. நிலக்கரியின் எடையில் சுமார் 3 சதவீதம் அளவுக்கு கந்தகம் உள்ள நிலையில், அதை அதிகம் பயன்படுத்துவதால், காற்று கடுமையாக மாசடையும் என்பது குறிப்பிடத்தக்கது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive