Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் உச்சரிப்புக்காக தயாராகும்' உலகெலாம் தமிழ்' குறும்படம்

மதுரை, தமிழ் மொழியை அனைவரும் சரியாக பயன்படுத்தும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பல்வேறு தலைப்புகளில் தயாராகி வரும் குறும்படங்கள், விரைவில் வெளியிடப்பட உள்ளன.

தமிழை சரியாக உச்சரிக்க, ஒலிக்க, எழுத அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஏற்ப, இயற்கை, பண்பாடு, மதிப்பீடுகள் சார்ந்து, பல்வேறு தலைப்புகளில், குறும்படங்கள் தயார் செய்யப்படுகின்றன. இதில், பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, எளிய முறையில் பாடல்களாக, நாடகங்களாக தயாரிக்கின்றனர்.
இதன் மூலம், தமிழை, 30 நாட்களில் எளிதாக புரிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் வாய்ப்பு அமையும். இவை அனைத்தும், 'உலகெலாம் தமிழ்' எனும் தலைப்பில், 10 - 12 நிமிடங்களுக்கு உட்பட்ட குறும்படங்களாக வெளிவர உள்ளன.
மதுரை திருமலை நாயக்கர் மகாலில், 'ர், ற்' என்ற இரு வார்த்தைகளின் உச்சரிப்பு குறித்து, ஒரு அரசவை காட்சியும், நடனமும் படம் பிடிக்கப்பட்டது. பாடல் காட்சிகளில், அரக்கோரணம் நகராட்சி பள்ளி மாணவர்களும், மற்ற காட்சிகளில், மதுரை தெற்குவாசல் நாடார் வித்யாசாலை மாணவர்களும் பங்கேற்றனர்.
படப்பிடிப்பின் இயக்குனர் அமலன்ஜெரோம், உதவி இயக்குனர் சாமுவேல் கூறியதாவது:
இதில் படமாக்கப்பட்டுள்ள காட்சி அமைப்புகளில், வார்த்தையின் உச்சரிப்பையும், எழுத்தின் வேறுபாட்டையும் தனித்தனியாக உணரச் செய்யும் வகையில் தான் இயக்கப்படுகிறது. இதனால், புதிதாக மொழியை கற்பவர்கள், தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில், தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு தான், இது முக்கிய தேவையாக இருக்கும். வட்டார வழக்கு பேச்சால், மொழியின் உச்ச ரிப்புகள் சிதைந்துள்ளன. இந்த குறும்படங்கள் வெளிவரும் போது, மாற்றங்கள் உருவாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த குறும்படங்களை, கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, தமிழை கற்க விரும்பும், மொழியின் அழகியலை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்க உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive