தமிழக பல்கலை நிர்வாகத்தை துாய்மைப்படுத்த, பல்கலைகளின் வேந்தரான கவர்னர்,
அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக
கவர்னராக பொறுப்பேற்றுள்ள, பன்வாரிலால் புரோஹித், கோவை, பாரதியார் பல்கலை
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
பின், கோவை மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் நிர்வாகம்
குறித்து, பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து, ஆய்வு நடத்தி உள்ளார். 'பணிகளை
ஆய்வு செய்தால் தானே, உண்மை நிலையை தெரிந்து, அரசு துறைகளை பாராட்ட
முடியும்' என, அவர் கூறியுள்ளார்.நிதி பற்றாக்குறை : இந்நிலையில், தமிழக
அரசின், 13 பல்கலைகளுக்கு வேந்தராகவும், பல்கலை நிர்வாகத்தில் தலையிடும்
அதிகாரம் படைத்தவராகவும், கவர்னர் உள்ளதால், பல்கலைகளின் கல்வி பணிகளை,
அவர் ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, பல்கலை
பேராசிரியர்கள் கூறியதாவது: பல்கலைகளின் துணைவேந்தர்கள் நியமனத்தில்,
பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் வழிகாட்டுதல்கள்
பின்பற்றப்படுவதில்லை.
யு.ஜி.சி., விதிகளின்படி, ஆராய்ச்சி படிப்பு, ஆராய்ச்சி நிதி ஒதுக்கீடு, மாணவர்களுக்கு உதவித்தொகை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.அதேபோல், சென்னை, மதுரை, அண்ணா உட்பட பல பல்கலைகளில், நிதி பற்றாக்குறை உள்ளது. சில பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனம்செய்யப்பட்டதில், விதிமீறல் புகார்கள் உள்ளன. கோவையில், பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில், கவர்னர் பங்கேற்ற நிலையில், அந்த பல்கலையின் துணைவேந்தர் நியமனம் மற்றும் அவரது நிர்வாகத்தில் நடந்த பேராசிரியர்கள் நியமனம் குறித்து, உயர் கல்வித்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
சர்ச்சை : சென்னை பல்கலையில், ஆண்டுக்கணக்கில், தேர்வு அதிகாரி, தொலைநிலை கல்வி இயக்குனர் பதவி காலியாக உள்ளது. அண்ணா பல்கலையில், ஓராண்டுக்கு மேல், துணைவேந்தர் இல்லை. கவர்னர் அமைத்த தேடல் குழு காலாவதியான பின், புதிய தேடல் குழு கூட அமைக்கப்படவில்லை. தமிழக அரசின் உயர் கல்வி மன்றத்தில், நிர்வாகிகள் முறைப்படி நியமிக்கப்படவில்லை. 'ரூசா' என்ற மத்திய அரசின் திட்ட நிதியை, கல்லுாரி வளர்ச்சி பணிக்கு பயன்படுத்துவதில்சர்ச்சைகள் உள்ளன. எனவே, இதையெல்லாம், கவர்னர் தலையிட்டு, சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...