இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்த வழக்கு (WP-28558/2017) விசாரணைக்கு (8.11.2017) இன்று வந்தது.
விசாரணையின் போது, நமது தரப்பு மூத்த வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர் ஊதிய அநீதி குறித்து விரிவாக விளக்கினார்.
நீதியரசர் நான்கு வாரத்திற்குள் அரசு பதில் மனு அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.
பின்னரும் நமது வழக்கறிஞர் வாதத்தைத் தொடர்ந்தார்.
மீண்டும் மூன்று வாரத்திற்குள்ளாக அரசு பதில் அளிக்க வேண்டும் என ஒத்திவைத்தார்.
நமது தரப்பில் மறுப்பு தெரிவித்து, கடந்த பிப்ரவரி 2016ல் அரசு வழங்கிய எழுத்துப்பூர்வ உத்தரவாத கடிதத்தை சுட்டிக்காட்டினார்.
நீதியரசரிடம் நமக்கு ஏற்பட்டுள்ள அநீதியை புரிந்து கொண்டார்.....
நீதியரசர் அரசு தரப்பைப் பார்த்து, "ஒரே பதவிக்கு" 1.6.2009
முன்பு ஒரு ஊதியம் பின்பு ஒரு ஊதியம் என எப்படி இருவேறு ஊதியம்
வழங்கப்படுகிறது எனக் கேட்டார்.*
அரசு தரப்பில் பதில் ஏதுமில்லை.
நமது தரப்பில் அரசாணை எண்--303 படி மூன்று மாத காலத்தில் விருப்பம் தெரிவிக்கலாம் என தெரிவித்துவிட்டு...
பின்னர் அரசு நிதித்துறை கடிதம் மூலமாக 20 ம் தேதிக்குள் விருப்பம் அளிக்க கட்டாயப்படுத்துகிறது எனக் கூறப்பட்டது.
நமது தரப்பில் அரசாணை எண்--303 படி மூன்று மாத காலத்தில் விருப்பம் தெரிவிக்கலாம் என தெரிவித்துவிட்டு...
பின்னர் அரசு நிதித்துறை கடிதம் மூலமாக 20 ம் தேதிக்குள் விருப்பம் அளிக்க கட்டாயப்படுத்துகிறது எனக் கூறப்பட்டது.
நீதியரசர் உடனடியாக அரசு தரப்பில் நாளை மறுதினமே பதில் மனு தாக்கல் செய்யவேண்டுமென உத்தரவிட்டார்.*
நாளை மறுதினம் (10.11.2017) மீண்டும் விசாரணை தொடரும்.....
இடைநிலை ஆசிரியர்களுக்கு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது....
தகவல்
ஜே.ராபர்ட்
2009&TET போராட்ட ஒருங்கிணைப்புக்குழு
மாநில அமைப்பு
2009&TET போராட்ட ஒருங்கிணைப்புக்குழு
மாநில அமைப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...